Saturday 2 April 2016

அந்த நாள் ஞாபகம்!!

 
திரு.மோகன்ஜி சொன்னது போல ஒவ்வொருத்தரும் தன் இளம் வயதில் தன் மனதுக்கு இனியவற்றை பொக்கிஷங்களாக சேகரிக்கிறார்கள்! சிலருக்கு அழகழகாய் குட்டிக்குட்டியாய் பொம்மைகள், சிலருக்கு சில கவிதைகள், கடிதங்கள், புத்தகங்கள் என்று இந்த வ‌ரிசை நீண்டு கொண்டே போகும். அந்த வரிசையில் இங்கே எனது சில ஓவியங்கள்!!

மிகச் சிறிய வயதிலேயே என் பெற்றோர் எனக்கு கர்நாடக இசையை கற்க வைத்தார்கள். ஆனால் இசையுடன், இசையை விடவும் ஓவியம் வரைவதிலே தான் மனம் ஆழ்ந்து போனது. ஏதாவது காகிதத்தில் வரைந்து பார்க்க முயன்றதெல்லாம் வயது ஏற ஏற வண்ண‌க்கலவைகளில் மனம் அமிழ்ந்து போக ஆரம்பித்தது. எண்பதுகளில் அனுப்பிய ஓவியங்களை எல்லாம் பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்தன. அப்போது வெளியான பல ஓவியங்களில் சில உங்கள் பார்வைக்கு!

1980களில் ஆனந்த விகடனில் என் சிறுகதை முதன் முதலாக வெளி வந்த போது, தனியாக நான் அனுப்பியிருந்த இந்த ஓவியத்தையும் வேறொரு சிறுகதைக்காக தேர்ந்தெடுத்து வெளியிட்டார்கள். அதன் பிறகு என் ஓவியங்கள் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன... 
குங்குமத்தில் வெளி வந்த ஓவியம் இது!
இதுவும் கூட குங்குமத்தில் வெளியானது தான்!
இது மங்கையர் மலரில் வெளியானது!
இது தேவியில் வெளியானது!
 
என் இளமைக்காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த திரு நடராஜன் வரைந்த ஓவியத்தைப்பார்த்து வரைந்தது இது!
சாவியில் ஒரு ஓவியப்போட்டி வைத்தார்கள்! என் ஓவியம் முதல் பரிசு பெற்றது! பெரும்பாலும் என் ஓவியங்கள் பத்திரிகைகளில் தொடர்ந்து வந்து கொன்டிருந்த காலம் அது! எல்லாமே சில வருடங்கள் தான்! வலது கை ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட விபத்து என் ஓவிய ஆர்வத்திற்கு தடை போட்டு விட்டுத்தான் ஓய்ந்தது!
 

11 comments:

KILLERGEE Devakottai said...

ஓவியங்கள் அருமை சகோ எனக்கு சிறு வயதிலிருந்தே அனைத்து நாட்டு ரூபாய்களையும் சேர்க்கும் பழக்கம் உள்ளது விரைவில் தங்களது வீட்டில் நான் எடுத்து வந்த ஓவியம் பதிவாகும் தலைப்பு - அகிலா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஓவியங்கள் அருமையாக உள்ளன. பாதுகாத்து வைத்துள்ளமையறிந்து மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

நானே கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்கள் ஒவியங்கள் அற்புதம். முதல் பரிசு பெற்ற ஓவியமும்! இப்போது ஓவியம் வரைவதில்லையா? இது மாதிரி நினைவுகள் பொக்கிஷம்.

அருள்மொழிவர்மன் said...

Looks brilliant..அருமையான ஓவியங்கள்..
தங்கள் எழுத்தும் சிறப்பு, வரைந்த ஓவியங்களும் சிறப்பு!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் வரைத்துள்ள எல்லா ஓவியங்களுமே மிகவும் அருமையாக உள்ளன. இருப்பினும் கீழிருந்து இரண்டாவதாகக் காட்டியுள்ள ‘பார்த்து வரைந்த ஓவியம்’ எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மனம் திறந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

sury siva said...

இந்த ஓவியங்களுக்கான கதைகளையும் சொல்லி இருந்தால்
.....ஓவியங்களின் அழகு இன்னமும் கூடுமோ !!


மிகவும் சிறப்பாக இருக்கின்றன.

வாழ்த்துக்கள்.


சுப்பு தாத்தா.

வெங்கட் நாகராஜ் said...

அத்தனையும் அருமை. பாராட்டுகள்.

'பரிவை' சே.குமார் said...

ஓவியங்கள் அருமை அம்மா...
எனது கதைக்கு உங்களை ஓவியம் வரையச் சொல்லலாம் என்று நினைத்தபடி வாசித்தபோது...
கட்டைவிரலில் அடிபட்டு ஓவியத்திற்கு தடை ஆனது அறிந்து வருந்தினேன்...
திறமைக்கு இப்படி ஒரு தடை...
அழகான படங்கள் அம்மா...

கீதமஞ்சரி said...

ஓவியங்கள் அனைத்துமே அற்புதம் மனோ மேடம். என்னுடைய மின்னூல் ஒன்றுக்கு உங்களுடைய ஓவியமொன்றைதான் கேட்க எணணியிருந்தேன். இரண்டுநாட்களுக்குள் ஓவியம் தேவைப்பட்டதாலும் அதற்குள் தங்களைத் தொடர்புகொள்ளும் வழியறியாமலும் எண்ணத்தைக் கைவிட்டேன்.

ஞா கலையரசி said...

மிக அழகான ஓவியங்கள்! தொடர்ந்து வரைய முடியாமல் போனது பெரிய சோகம்! கையில் அடிபடாமல் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ பரிசுகளை வென்றிருப்பீர்கள்! வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள் மேடம்!

saamaaniyan said...

வணக்கம் அம்மா...

அருமையான ஓவியங்கள்... கட்டைவிரல் விபத்து வருத்தமான சம்பவம்.

வாழ்வில் நிகழும் பல சம்பவங்களுக்கான காரணம் கிடைப்பதில்லை...


நன்றி
சாமானியன்


எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி